நாமக்கல் மாவட்டம் எஸ்.பி.பி காலனி பகுதியில் அரசு பேருந்தின் முன் பக்க டயர் வெடித்ததில் நிலைதடுமாறி எதிரே வந்த லாரியின் மீது மோதியதில், பேருந்தில் பயணித்த 15க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து பயணிகள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து காரணமாக ஈரோடு, நாமக்கல் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.