மானாமதுரையில் இருந்து சிவகங்கை நோக்கி பயணித்த அரசு பேருந்தின் முன் பக்க டயர் திடீரென வெடித்ததால் பயணிகள் அலற, சாதுரியமாக செயல்பட்ட ஓட்டுநர் பல உயிர்களை காப்பாற்றினார். டயர் வெடித்ததை அறிந்த உடன் பேருந்தை சாலையோரம் பத்திரமாக நிறுத்தி, பயணிகளை பாதுகாத்த ஓட்டுநர் சலீமுக்கு பாராட்டுகள் குவிகின்றன.