புதுக்கோட்டை... தைல மரக் காட்டுக்குள் சிதைஞ்ச நிலையில கிடந்த பெண் சடலம். சடலத்தில் கிடந்த துணியை வைத்து உயிரிழந்தது பெண் என அடையாளம் கண்ட போலீஸ். விசாரணையில் வெளிவந்த பல அதிர்ச்சி தகவல்கள். பணப்பிரச்னையால் பெண் கொலை செய்யப்பட்டது அம்பலம். பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரித்த போலீஸ். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பின் வெளியான தீர்ப்பு. கொலையாளிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன?புதுக்கோட்டையில உள்ள ரெகுநாதபுரம் கிராமத்த சேந்த துரைச்சாமி - துளசியம்மாள் தம்பதிக்கு குழந்தை இல்லன்னு கூறப்படுது. இதனால துரைச்சாமி வேற ஒரு பெண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. கணவன் வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்ட சோகத்துல இருந்த துளசியம்மாள் தனிமையில வாழ ஆரம்பிச்சுருக்காங்க.இவங்க சத்துணவு அமைப்பாளராவும் வேலை பாத்துட்டு இருந்தாங்க. இதுக்கிடையில இவங்களுக்கும் ப்ரைவேட் பஸ் டிரைவர் ஜெயபாலுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கு. ஆரம்பத்துல நார்மலா பேச ஆரம்பிச்சவங்க அதுக்கடுத்து நட்பா பழகிருக்காங்க. அதுக்கடுத்து ரெண்டு பேரும் க்ளோஸ் ப்ரண்ட்ஸாவும் இருந்துருக்காங்க. அப்ப துளசியம்மாள் கிட்டஇருந்து 3 லட்சம் ரூபாய கடனா வாங்குன ஜெயபால் அந்த பணத்த, அரசு பஸ் ஓட்டுநர் வேலைக்கு கட்டி பணியில சேந்துருக்காரு.அதுக்கப்புறம் கொஞ்சம் நாள் கழிச்சு, துளசியம்மாளுக்கு பணத்தேவை ஏற்பட்டிருக்கு. அப்ப ஜெயப்பாலுக்கு ஃபோன் பண்ணி பணத்த கேட்ருக்காங்க. அதுக்கு ஜெயப்பால் என் கிட்ட இப்ப சுத்தமா பணம் இல்லன்னு சொல்லிருக்காரு.ஆனா துளசியம்மாள் எனக்கு கண்டிப்பா பணம் வேணும்ன்னு சொல்லி ஜெயப்பால டார்ச்சர் பண்ணிருக்காங்க. ஆனா ஜெயப்பால் ஏதேதோ காரணம் சொல்லி தட்டிக் கழிச்சுருக்காரு. இதனால அவங்க இரண்டு பேருக்கு இடையில பிரச்னை ஏற்பட்டிருக்கு.சம்பவத்தன்னைக்கு துளசியம்மாவ, அங்க உள்ள தைல மரக்காட்டுக்கு பணம் விஷயமா பேச கூப்டு போய்ருக்காரு. அப்ப துளசியம்மாள் நீ என்னோட 3 லட்சம் ரூபாய கொடுக்கனும், அப்படி இல்லன்னா உன் மேல போலீஸ் ஸ்டேஷன்ல புகார் அளிச்சுருவேன்னு சொல்லிருக்காங்க. இதனால கோபமான ஜெயபால் மறைச்சு வச்சுருந்த கத்திய எடுத்து துளசியம்மாள சரமாரியா குத்திக் கொன்னுட்டாரு.அதுக்கடுத்து துளசியம்மாள் கழுத்துல இருந்த 5 பவுன் தங்க நகைய எடுத்துட்டு அங்கருந்து தப்பிச்சு போய்ட்டாரு ஜெயப்பால்.ஆனா கிராம மக்கள் மூலமா சடலம் கிடக்குறத தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் விசாரணை பண்ணி பஸ் டிரைவர் ஜெயப்பால அரெஸ்ட் பண்ணிட்டாங்க. இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்துல நடந்துட்டு இருந்துச்சு. கிட்டத்தட்ட 9 வருஷம் கழிச்சு இப்ப தீர்ப்பு வெளியாகிருக்கு. அதுல ஜெயப்பாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிருக்கு.