நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினகுடியில் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய கரடியை, விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். கடந்த சில நாட்களாக மசினகுடி குடியிருப்பு பகுதியில் உலவி வரும் கரடி, திங்கட்கிழமை காலை சிவக்குமார் காலனி பகுதியில் ரிஜு என்பவரது வீட்டிற்குள் புகுந்தது. பொதுமக்கள் விரட்டியதால் அங்கிருந்து வெளியேறி மற்றொரு வீட்டிற்குள் புகுந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் தீப்பந்தம் வைத்து கரடியை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். கரடி புதருக்குள் சென்று மறைந்து கொண்டதால், 5 மணி நேரமாக போராடியும் அதனை விரட்ட முடியாமல் தடுமாறினர்.