தேனி மாவட்டம் சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் அருகே சுருளி அருவிக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், அருவிக்கு செல்லக்கூடிய பாதை மற்றும் அருவியில் யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுருளி அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.