ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே ஐந்து நாட்களாக தேங்கி நிற்கும் மழை வெள்ளத்தில், பாம்பு உள்ளிட்ட விஷ சந்துகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். முல்லை நகர், எருமை தரவை நகர் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், தேங்கி நிற்கும் வெள்ளத்தால் அன்றாட வேலைக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.