கோவை வெள்ளிப்பாளையம் பகுதியிலுள்ள பவானியாற்றின் தடுப்பணை மதகுகளில் ஏற்பட்ட இயந்திர கோளாறால் கரையோர கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. பில்லூர் அணையிலிருந்து பவானி ஆற்றில் நீர் திறக்கப்படும் நீரானாது வெள்ளிப்பாளையம் கதவணையில் தேக்கி வைத்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் தடுப்பணை மதகுகளை திறப்பதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெள்ளிப்பாளையம், கரட்டுமேடு உள்ளிட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது பொது மக்களின் உதவியுடன் கதவணை மதகுகள் திறக்கப்பட்டு அதன் வழியே ஆற்று நீர் வெளியேறி வருகிறது.