சென்னையில் இருந்து கொச்சிக்கு புறப்பட்ட ஸ்பைஜெட் பயணிகள் விமானம், நடுவானில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டது. சென்னையில் இருந்து காலை 6.30 மணிக்கு கேரளாவின் கொச்சிக்கு ஸ்பை ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், 147 பயணிகள்,8 விமான ஊழியர்கள் என மொத்தம் 155 பேருடன், உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அதன் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிக்கப்பட்டது. விமானியின் துரித நடவடிக்கையால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.