நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி விழுந்து காணாமல் போன மீனவரைத் தேடும் பணியில் கடலோரக் காவல்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த பாலமுருகன், ரவி, பாலையா, வராஜா, சேகர், தமிழ்செல்வம் மற்றும் குட்டியாண்டியூரை சேர்ந்த பாலு, வேல் (எ) பழனிவேல், சுபாஷ் ஆகிய 9 மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக விசைப்படகில் கடலுக்குள் சென்றனர். கோடியக்கரைக்கு கிழக்கே 11 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது விசைப்படகில் இருந்து பழனிவேல் தவறி கடலுக்குள் விழுந்து காணாமல் போனார்.'இந்தச் சூழலில், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், மீனவரின் குடும்பத்தினரை சந்தித்து நம்பிக்கை கூறி ஆறுதல் தெரிவித்தார்.