தமிழக வெற்றிக் கழக மாநாட்டுத் திடலில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் மாநாட்டுத் திடலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், பார்க்கிங் ஏற்பாடுகள், வந்து செல்வதற்கான பாதை வசதி குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.