கன்னியாகுமரி மாவட்டம் தோட்டியோடு மேற்குத் தொடர்ச்சி மலையில் 2-வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீயால் வன விலங்குகள், மூலகை செடிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மலையடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினரும், வனத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.