மதுரை சித்திரை திருவிழாவையொட்டி, கள்ளழகர் எழுந்தருளும் தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களை தயார் படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா மே மாதம் 8 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக கள்ளழகர் திருக்கோயிலில் உள்ள தங்ககுதிரை வாகனம். சேஷவாகனம், கருடவாகனம் மற்றும் தங்கப்பல்லக்கு உள்ளிட்டவைகளை சீரமைத்து,வர்ணம் பூசி மெருகேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.