தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் பெண் ஒருவர் தவறவிட்ட பத்தாயிரம் ரூபாய் பணத்தை கோவில் ஊழியர்கள் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர். வெள்ளிக்கிழமை கோவிலுக்கு வந்த மம்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பத்தாயிரம் ரூபாய் வைத்திருந்த மணி பர்சை தவறிவிட்டதாக கோவில் ஊழியரிடம் தெரிவித்ததை அடுத்து மீட்கப்பட்டது.