அரியலூரில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் தம்மை பெண் நிர்வாகி ஒருவர் தமிழகத்தில் வருங்கால துணை முதல்வர் என்று அழைத்ததால், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்அதிர்ச்சி அடைந்தார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு வரும் 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ள நிலையில் இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, வரவேற்புரை ஆற்றிய பெண் நிர்வாகி வருங்கால துணை முதல்வர் என்று அழைத்தபோது பதறிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அண்ணன் என்று அழைத்தாலே போதும் என்று கூறினார்.இதையும் படியுங்கள் : 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை... முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்