சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மகளுக்கு திருமணம் நடந்த நாளிலேயே, தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.என்.புதூர் கிராமத்தை சேர்ந்த அழகப்பன்- புனிதவள்ளி தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். அவர்கள், தனது மூத்த மகள் வைதேகிக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்தவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புனிதவள்ளிக்கு சசோதரர்கள் இல்லை என்பதால் தாய்மாமன் சீர்வரிசையை யார் கொண்டு வருவது என்பதில் ஏற்பட்ட தகராறில் அழகப்பன் வீட்டை விட்டு சென்றதாக தெரிகிறது.அவர் வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று திருமணமும் முடிந்த நிலையில், வீட்டின் அருகே உள்ள மரத்தில் அழகப்பன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.