பெரம்பலூர் மாவட்டம் வரகூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி விஷ வண்டு கடித்து உயிரிழந்தார். மேய்ச்சலுக்காக மாடுகளை வயலுக்கு ஓட்டிச் சென்றபோது விவசாயி மணியை விஷ வண்டு கடித்ததில் அவர் அங்கேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.