வேலூர் மாவட்டம் விருதம்பட்டு அருகே தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் 23-வது கிளை திறக்கப்பட்டது. கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த மருத்துவமனை தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் தனது கிளைகளை நிறுவி சேவை அளித்து வருகின்றது. இந்நிலையில், அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அறுவை சிகிச்சை அறைகள், மருத்துவ ஆலோசனை அறைகள், 5 பரிசோதனை அறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகள் கொண்ட நோயாளிகள் தங்கும் அறைகள் மற்றும் பகல் நேர நோயாளிகளின் ஓய்வு அறைகள் என பல வசதிகளுடன் வேலூரில் கிளையை திறந்துள்ளது.