சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலின் வெளிப்புறம் மேற்கூரை அமைக்கக் கூடாது என பாஜகவினரும், அமைக்கக் கோரி திமுகவினரும் மல்லுக்கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இக்கோவிலில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், வெயில் மற்றும் மழை காலங்களில் பக்தர்களின் வசதிக்காக ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மேற்கூரை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, அதிகாரிகள் இரும்பு பீம் பதிக்க வந்தபோது, வெளிப்புறம் கடை போட்டுள்ள வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக பாஜகவினர் வந்தனர். இதையறிந்த திமுகவினர், அதிகாரிகளுக்கு ஆதரவாக களமிறங்கினர்.