சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் நடைபெற்று வரும் விநாயகர் சிலைகள் கண்காட்சியினை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சென்று பார்வையிட்டார்.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கட்டிடக்கலை நிபுணர் சீனிவாசன் என்பவர் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளின் கண்காட்சியினை நடத்தி வருகிறார்.இதனையொட்டி, அங்கு சென்ற ஆளுநர், கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்டவைகளால் தயாரிக்கப்பட்டுள்ள பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகளை பார்வையிட்டு மகிழ்ந்தார்.