சென்னையில், இன்று காலை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.89,440க்கு விற்பனை ஆகிறது.சர்வதேச நிலவரங்களால், இந்தியாவில் தங்கத்தின் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில், கடந்த சனிக்கிழமை (நவ.1ஆம் தேதி) ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,480 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,310 ஆக விற்பனை ஆனது. அதேபோல் வெள்ளி விலை, ஒரு கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.166க்கு விற்பனை ஆனது.நேற்று முன்தினம் (நவ.3) தங்கத்தின் விலையில், ஒரு சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.90,800 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11.350 ஆக இருந்தது. நேற்று (நவ.4) ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.90,000 என விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,250 ஆக விற்பனை ஆனது.வெள்ளி விலை, ஒரு கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.165 ஆக விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (நவ.5) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்தது.ஒரு சவரன் ரூ.89,440 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.11,180 ஆக விற்பனை ஆனது. வெள்ளி விலையில் ஒரு கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.163 ஆக விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களில் தங்கத்தின் விலையில், ஒரு சவரனுக்கு ரூ.1,360 குறைந்து பொது மக்களுக்கு ஆறுதலை தந்துள்ளது.