பொங்கல் திருநாளையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் மாங்குழி பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் மாணாக்கர்கள் தீப்பந்த சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆஸ்கார் உலக சாதனை முயற்சியாக தற்காப்புக்கலை பயிற்சி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற தீப்பந்த சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கேற்று சிலம்பம் சுற்றி அசத்தினர்.