தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி் மருத்துவமனைகளில்,இருதய நோய் சிகிச்சைக்கான உபகரணங்கள் சரியாக வேலை செய்யாமல் இருப்பது வேதனைஅளிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வருவதாக குறைக்கூறினார்.