அதிமுக கூட்டணிக்கு தவெக வருகிறது என எடப்பாடி பழனிசாமி பேசி வருவது தேவையற்றது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுயமரியாதை உள்ள ஒரு இயக்கம் யாருக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை என்று கூறினார். கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, விஜய்யுடன் ராகுல்காந்தி பேசியது மனிதநேய செயல் என்றும், அதை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பிய செல்வப் பெருந்தகை, தவெகவுடன் கூட்டணி குறித்து எந்த காங்கிரஸ் தலைவர் பேசினார்கள் என்பதை சொல்ல முடியுமா? என வினவினார்.