தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை கலைக்க வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது. இச்சங்கம் சார்பில், ஆணைய அதிகாரிகளை கூண்டோடு பணி நீக்கம் செய்துவிட்டு, நேர்மையான அலுவலர்களை நியமனம் செய்ய வலியுறுத்தி சென்னை பனகல் மாளிகை எதிரே காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து எந்த ஆய்வுகளையும் செய்வதில்லை என்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.