கோடை காலத்தில் பெய்த கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏரிக்கு தற்போது 191 கன அடி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கும் நிலையில், மொத்த நீர் மட்டமான 47.50 அடியும் நீர் நிரம்பியுள்ளது. இன்னும் சில நாட்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உள்ள நிலையில் தண்ணீரை விரயமாக்காமல் கவனமாக பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.