ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே ஆசனூர் வனப்பகுதியில் கரும்பு லாரியை வழிமறித்து, கரும்புகளை சுவைத்த யானையால் லாரி ஓட்டுநர் அச்சத்தில் உறைந்தார். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில், காட்டு யானைகள் அந்த வழியாக வரும் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து சாலையில் உலா வருவதும் வாகனங்களை துரத்தி வருவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், கரும்பு ஏற்றி வந்த லாரியை ஆசனூர் காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே வழி மறித்த யானை, கரும்புகளை சுவைக்க தொடங்கியது. லாரி ஓட்டுநர் லாரியை முன்னாடி நகர்த்த முயன்ற போதும் இடைவிடாது வழிமறித்து கரும்புகளை சுவைத்தது. இந்த சம்பவத்தால் லாரி ஓட்டுநர் அச்சத்தில் உறைந்தார்.