கோவை மாவட்டம் தடாகம் அடுத்த பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒன்று தோட்டத்தில் இருந்த இரும்பு கேட்டை அசால்டாகா திறந்து கொண்டு உள்ளே புகுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. வெங்கடேஷ் என்பவருடைய தோட்டத்திற்குள் காட்டு யானை புகுந்த நிலையில், பயர்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி உள்ளதால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.