திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கேரளஅரசு பேருந்தை வழிமறித்த படையப்பா யானையால் பயணிகள் அச்சமடைந்தனர். உடுமலையிலிருந்து மூணார் நோக்கி சென்ற கேரள அரசு பேருந்து மலைப்பாதையில் வாகுவாரா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது படையப்பா காட்டுயானை வழிமறித்து நின்றது. பேருந்தை பார்த்ததும் ஆக்ரோசத்துடன் வேகமாக வந்த யானை சுமார் அரை மணி நேரமாக பேருந்தை வழிமறித்து அச்சுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த பயணிகள் அப்பகுதியில் இரவு நேரத்தில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.