நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் அருகே இடித்து தள்ளப்பட்டு ஆபத்தான முறையில் இருந்த கட்டிடத்தின் மீது மதுபோதையில் இருந்த இளைஞர் படுத்து உறங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.இதையடுத்து அங்கிருந்தவர்கள் அளித்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரை அங்கிருந்து விரட்டினர்.