செங்கல்பட்டு மாவட்டம் கற்பகவிநாயகா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் ஏறிய பெண் பயணி மற்றும் முதியவர்களை அரசு பேருந்து ஓட்டுநர் அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவதூறாக ஓட்டுநர் பேசியதை குறித்து பெண் பயணி விஜயலட்சுமி செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் உள்ள நேர கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த நிலையில் அவர் பதிலளிக்காமல் அலட்சியத்துடன் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.