சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கத்தில் பெண் பயணிகளை மரியாதைக் குறைவாக வாடி, போடி என்று பேசிய அரசு பேருந்து ஓட்டுநரை, பயணிகள் சேர்ந்து போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் போலீசார் 15 நிமிடம் மட்டும் விசாரித்து விட்டு நடவடிக்கை எடுக்காமல் ஓட்டுநரை திருப்பி அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது.