செல்போன் பார்த்தபடி அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாகையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கிச் சென்ற பேருந்தை ஓட்டுநர் சக்திவேல் செல்போன் பார்த்தபடியே கவனக்குறைவாக சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்கியுள்ளார். இந்த காட்சியை அந்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில், வீடியோ வைரலானதை தொடர்ந்து, ஓட்டுநர் சக்திவேலை பணியிடை நீக்கம் செய்து நாகை மண்டல போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.