சென்னை மதுரவாயல் அருகே பணப் பிரச்சனையால் ஓட்டுநரை கடத்திச் சென்று கடுமையாக தாக்கிய, டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். சென்னை சூளைமேட்டில் இயங்கி வரும் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்த திருச்சியை சேர்ந்த கோபி, 31 ஆயிரத்தை முன்பணமாக பெற்றுக்கொண்டு வேலையை விட்டு நின்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த டிராவல்ஸ் உரிமையாளர் விஜய், வானகரம் மீன் மார்க்கெட் அருகே நின்றிருந்த கோபியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளார். மேலும் நண்பரான திவாகரை வரவழைத்து, இருவரும் சேர்ந்து முன்பணமாக கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டு கோபியை கடுமையாக தாக்கியுள்ளனர்.