காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிச்சத்திரம் பஜார் பகுதியில் தாறுமாறாக வந்த கன்டெய்னர் லாரி, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலர்கள், கார்களை இடித்துத் தள்ளிக் கொண்டு சென்றதில் காவலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, நடந்து சென்று கொண்டிருந்த ஈஸ்வரன் என்பவரை மோதித் தள்ளிக் கொண்டு சாலையோரம் கவிழ்ந்தது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில், வடமாநில லாரி ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து பாலுசெட்டிச்சத்திரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.