திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வடசென்னை அனல் மின்நிலையத்தில், சிறுநீர் கழிப்பதற்காக சென்ற ஓட்டுநர் சாம்பல் கழிவு கால்வாயில் தவறி விழுந்து மாயமான நிலையில், 8 நாட்களாகியும் அவரது உடலை மீட்டு தரவில்லை என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த நாகராஜின் உறவினர்களின் போராட்டத்தால், ஆலையில் சாம்பல் கழிவுகளை அள்ளும் பணி தடைபட்டது.