திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கல்வேலிபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது. மதுரையை சேர்ந்த ஜோயல் ஜேம்ஸ் வில்லியம்ஸ், திருச்சியில் இருந்து காரில் ஊர் திரும்பியபோது தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து, நடுவே உள்ள தடுப்பில் ஏறி அங்கிருந்த மின் கம்பத்தின் மீது மோதி தலை குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி சென்ற நபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.