திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவில் கவிழ்ந்து தனியார் நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழந்தார். வடமதுரை சித்தூர் பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி புவனேஸ்வரி தனது நண்பர் நந்தகுமாருடன் பழனி முருகன் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பும்போது, சத்திரப்பட்டி பகுதியில் விபத்து ஏற்பட்டது. தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே புவனேஸ்வரி உயிரிழந்த நிலையில், நந்தகுமார் காயங்களுடன் உயிர் தப்பினார். அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த காரில், டயரும் பஞ்சர் ஆனதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.