சென்னை கோயம்பேடு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், வீலிங் செய்தும் ஆட்டோ ஓட்டிய ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். கடந்த 5-ஆம் தேதி இரவு கோயம்பேடு 100 அடி சாலை பேருந்து நிறுத்தம் அருகே அதிவேகமாகவும், பின் சக்கரத்தை தூக்கி வீலிங் செய்தும் ஆட்டோவில் சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து, கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆட்டோ ஓட்டிய திருவேற்காட்டை சேர்ந்த பஞ்சர் வாசு என்கிற வாசுதேவனை கைது செய்தனர்.