தெரு நாய் குறுக்கே வந்ததில், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், நிலை தடுமாறி கீழே விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிசிடிவி காட்சி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை குன்னத்தூர் சாலையில், தெரு நாய்களின் அட்டகாசம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், குன்னத்தூர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் இருவர் வந்து கொண்டிருக்கும் போது, தெரு நாய் ஒன்று, இரு சக்கர வாகனத்தின் முன் சக்கரத்தில் சிக்கி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும், நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தின் பின்புறம் வந்து கொண்டிருந்த கார் மற்றும் தனியார் கல்லூரி பேருந்து, ஒன்றின் பின் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானது. இதன் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதையும் பாருங்கள்; திடீரென குறுக்கே வந்த நாய்.. நிலை தடுமாறி கீழே விழுந்த பைக்.. அதிர்ச்சியூட்டும் CCTV | Erode | CCTV