காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம், குருமஞ்சேரி, படூர், களியாம்பூண்டி உள்ளிட்ட 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பற்றாகுறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 14 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 5 மருத்துவர்கள் மட்டும் வேலை செய்து வருவதாக மருத்துவர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.