நாகையில் திமுக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அலங்காரத்திற்காக கட்டப்பட்டிருந்த வாழைத்தார்களை, அக்கட்சித் தொண்டர்களே பறித்துக் கொண்டு சென்றனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி விட்டு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, திமுக தொண்டர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாழைத்தார்களை எடுத்துச் சென்றனர்.