திமுக ஆட்சியில் தான் பெருந்திட்ட வரைவு கொண்டுவரப்பட்டு ஆயிரத்து 700 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு பெருமிதம் தெரிவித்தார். குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் திருப்பணியை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, சுமார் 300 கோடி ரூபாய் செலவில் திருசெந்தூரில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வரைவு பணிகள் நிறைவுபெரும்போது பக்தர்களுக்கு கூடுதல் வசதி கிடைக்கும் என்று தெரிவித்தார். மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகர் சிலை அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.