செங்கல்பட்டு கல்பாக்கம் அருகே நிலத் தகராறில் பெண்களிடம் அராஜகத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகர் மீது போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த உமாசங்கர், குடும்ப சொத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், அவரது உறவினர் சென்னை அயனாவரத்தை சேர்ந்த திமுக பிரமுகர் சேகர், அடியாட்களுடன் அவரது வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார்.