திமுக அரசு ஆயிரம் ரூபாய் கொடுத்து மக்களை ஏமாற்றி வருவதாக முன்னாள் அமைச்சர் காமராஜ் விமர்சித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த கடுவங்குடி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து நல்ல திட்டங்களையும் திமுக அரசு நிறுத்திவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.