புதிய கல்விக் கொள்கையை திமுக அரசு ஏற்றுக்கொண்டு விட்டு, எதிர்ப்பதை போல் நாடகமாடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டமே புதிய கல்விக் கொள்கையின் கீழ் தான் வருவதாக கூறினார்.