திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் சாலையில் குட்டையை நடைபாதையாக மாற்றி பார்க் அமைப்பில் உருவாக்கும் நகராட்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அந்த வழியாக பள்ளிக்கு சென்ற மாணவிகள் தங்கள் பள்ளியில் நாய்கள் சுற்றி திரிவதாக புகார் தெரிவித்ததையடுத்து ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.