திருவாரூரில் விவசாய விரோத போக்கை கடைபிடித்து வருவதாக கூறி வேளாண் துறை இயக்குநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் உரத் தட்டுப்பாடு குறித்தும், சம்பா சாகுபடி தொடங்க உள்ளதால் விதை கையிருப்பு குறித்தும் விவசாயிகள் கேள்வி எழுப்பினர். அப்போது வேளாண்துறை இயக்குநர் முருகேசன், தங்களுக்கு நிவாரணம், இன்சூரன்ஸ் போன்றவை கிடைக்க விடாமல் செய்து வருவதாகக் கூறி விவசாயிகள் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.