அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 20 வருடங்களாக சமுதாய கூடம் திறக்கப்படாமல் பாழடைந்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நரிக்குளம் கிராமத்தில் 20 வருடங்களுக்கு முன்பு கட்டமைக்கப்பட்ட சமுதாயக்கூடம் இன்று வரை மக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலையில், பாழடைந்து சிதலமைடந்து காணப்படுகிறது. திருமணம், ஊர் திருவிழா போன்ற விழாக்களை பள்ளிக்கூடங்களில் வைத்து நடத்தி வரும் கிராம மக்கள் சமுதசமுதாயக்கூடத்தை மறு சீரமைப்பு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.