Also Watch
Read this
By: Manigandan Raja

தவெகவினர் இடையூறு :
சென்னை புழுதிவாக்கம் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி 14 வது மண்டல அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றபோது கூட்டத்தில் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ பி.சரவண மூர்த்தி கலந்து கொண்ட நிலையில் அவருடைய ஆதாரவாளர்களும் கட்சியின் கூட்டம் நடைபெறுவது போல் மாநகராட்சி அரங்கில் அனுமதியின்றி புகுந்து.
உயர் அதிகாரிகள் அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டு, ரீல்ஸ் எடுத்துக் கொண்டு தவெகவினர் அடாவடியில் ஈடுபட்ட காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாய் பரவி வருகிறது.
சுமார் 20 க்கும் மேற்பட்ட தவெக எம்எல்ஏ ஆதரவாளர்கள் மண்டல அலுவலகத் திற்குள் புகுந்து அதிகாரிகள் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டும், சுற்றி நின்றும் ரீல்ஸ் வீடியோ எடுத்ததால் அதிகாரிகளுக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் மிகவும் இடையூராக இருந்ததாக குற்றம்சட்டினர்.
மாமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் தவிர வேறு யாரும் அலுவலக உள்ளே நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி இல்லாத நிலையில் சோழிங்கநல்லூர் தவெக எம்எல்ஏ பி.சரவண மூர்த்தியுடன் சென்ற தவெகவினர் ரீல்ஸ் எடுக்கும் செயலில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு இடையூறு ஏற்பாடுத்தியது அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
குறிப்பாக இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, எம்.எல்.ஏ பேசுவதைவிட அவருடன் வந்த ஆதரவாளர்கள் தான் அதிக அளவில் பேசுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, புதுசு புதுசாக செய்கிறார்கள் என கூறினர்.
மக்கள் பிரதிநிதி அல்லாதோர் தவெகவினர் அரசு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும் தங்களுடைய எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என தவெக பொதுச்
செயலாளர், அமைச்சர் என்.ஆனந்த் எச்சரிக்கை விடுத்தும்.

சோழிங்கநல்லூர் தொகுதியின் தவெக ரீல்ஸ் எம்எல்ஏ பி.சரவணமூர்த்தி ஆதரவாளர்கள் தொடர்ந்து அட்றாசிட்டியில் ஈடுபடுவது அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மத்தியில்
கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று அராஜகம் போக்கை கையாலும் தவெகவினர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையாக உள்ளது.
நேற்று சென்னை மாநகராட்சி 15 வது மண்டல குழு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் சோழிங்கநல்லூர் தவெக ரீல்ஸ் எம்எல்ஏ பி.சரவணமூர்த்தி உடன் அவருடைய ஆதரவாளர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் மண்டல அலுவலகத்திற்கு உள்ளே புகுந்து ரீல்ஸ் வீடியோ எடுத்து.
நாற்காலியில் அமர்ந்து கொண்டு அராஜக செயலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருளானது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved