செங்கல்பட்டில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஐந்தாவது தண்டவாளத்தில் இரும்பு சங்கிலியால் பூட்டப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இதனை அகற்றாமலேயே ரயிலை இயக்கியபோது முதல் பெட்டியின் சக்கரம் தடம் புரண்டது. இதனால் மற்ற ரயில்களின் இயக்கமும் தடைபட்டது.இதையும் படியுங்கள் : பேருந்தில் பணத்தை தவற விட்ட பெண் பயணி உடைமைகளை பத்திரமாக ஒப்படைத்த ஊழியர்கள்..!